32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

Editor

நாமக்கல்லில் ,ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு பரிசு: போலீசார் வித்தியாசமான விழிப்புணர்வு. நாமக்கல்

நாமக்கல்லில் ,ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு பரிசு: போலீசார் வித்தியாசமான விழிப்புணர்வு.

நாமக்கல் கோட்டை ரோடு சந்திப்பில் போக்குவரத்து காவல்துறையினர் சார்பில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் ஹெல்மெட் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளை போலீசார் பாராட்டி, அவர்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கி வரவேற்றனர். நாமக்கல் நகரில் இருசக்கர வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி, கோட்டை ரோடு சந்திப்பில் போக்குவரத்து காவல்துறையினர் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் […]

August 20, 2026 Editor
நாமக்கல்லில் பாஜக சார்பில் ஒண்டிவீரன் நினைவு நாள் அனுசரிப்பு. நாமக்கல்

நாமக்கல்லில் பாஜக சார்பில் ஒண்டிவீரன் நினைவு நாள் அனுசரிப்பு.

நாமக்கல்லில் பா.ஜ.க. சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 255-வது நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. நாமக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ.க. பட்டியலின அணி சார்பில், நாமக்கல் மணிக்கூண்டு அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கிழக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் கே.பி.சரவணன் தலைமை வகித்தார். தொடர்ந்து, ஒண்டிவீரனின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் பட்டியலின மாவட்ட தலைவர் ஆர்.பி.தமிழரசு, மாவட்ட பொதுச்செயலாளர்கள் ராம்குமார், வழக்கறிஞர் பிரபு, மாநில செயற்குழு உறுப்பினர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தகவல் […]

August 20, 2026 Editor
திருச்செங்கோடு அருகே பேக்கரி கடையில் குட்கா விற்பனை: 5 கிலோ பறிமுதல்; ஒருவர் கைது. திருச்செங்கோடு

திருச்செங்கோடு அருகே பேக்கரி கடையில் குட்கா விற்பனை: 5 கிலோ பறிமுதல்; ஒருவர் கைது.

திருச்செங்கோடு அருகே பேக்கரி கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ததாக கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த ஆண்டிபாளையம் பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக திருச்செங்கோடு ரூரல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் ஆண்டிபாளையம் பகுதியில் உள்ள கடைகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர். […]

August 20, 2026 Editor
சேந்தமங்கலம் ரவுண்டானாவை அழகுபடுத்தும் பணி தீவிரம். சேந்தமங்கலம்

சேந்தமங்கலம் ரவுண்டானாவை அழகுபடுத்தும் பணி தீவிரம்.

சேந்தமங்கலம் பேரூராட்சியில் முக்கிய சந்திப்பாக விளங்கும் ரவுண்டானாவை தூய்மைப்படுத்தி, அழகுபடுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட புதிய பஸ் நிலையம் அருகே வண்டிப்பேட்டை பகுதியில் மூன்று வழிச்சாலை சந்திப்பு அமைந்துள்ளது. நாமக்கல், ராசிபுரம், புதுச்சந்தை ஆகிய பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலையாக இந்த வழித்தடம் உள்ளது. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக பயணிக்கும் வகையில் இப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரவுண்டானா அமைக்கப்பட்டது. இந்நிலையில், சேந்தமங்கலம் பேரூராட்சி […]

August 20, 2026 Editor
உலக புகைப்பட தினம்: திருச்செங்கோட்டில் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்பட கலைஞர்கள். திருச்செங்கோடு

உலக புகைப்பட தினம்: திருச்செங்கோட்டில் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்பட கலைஞர்கள்.

உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் புகைப்பட கலைஞர்கள் கேக் வெட்டியும், ஒருவருக்கொருவர் கேக் ஊட்டியும், குழு புகைப்படம் எடுத்தும் உற்சாகமாக கொண்டாடினர். மேலும், புகைப்பட கலைஞர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என்றும், புகைப்படத் தொழிலுக்கான மூலப்பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். ஆகஸ்ட் 19, 1839-ம் ஆண்டு பிரெஞ்சு அரசு டாகியோடைப் எனப்படும் புகைப்பட முறையை உலகிற்கு இலவசமாக வழங்கியதை நினைவுகூரும் […]

August 19, 2026 Editor
பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கக் கோரி ப.வேலூரில் நாளை கடையடைப்பு: கொமதேக ஆதரவு. பரமத்திவேலூர்

பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கக் கோரி ப.வேலூரில் நாளை கடையடைப்பு: கொமதேக ஆதரவு.

காவிரி பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கக் கோரி பரமத்தி வேலூரில் நாளை நடைபெறும் முழு கடையடைப்பு போராட்டத்திற்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் காவிரி தடுப்பணையில் இருந்து ராஜாவாய்க்கால், குமாரபாளையம் வாய்க்கால், மோகனூர் வாய்க்கால், பள்ளவாய்க்கால், பொய்யேறி வாய்க்கால் என 5 பாசன வாய்க்கால்கள் மூலம் 16,200 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. […]

August 19, 2026 Editor
பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்வு: பால் உற்பத்தியாளர்கள் ஏமாற்றம். குமாரபாளையம்

பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்வு: பால் உற்பத்தியாளர்கள் ஏமாற்றம்.

தமிழக முதல்வர் 110 விதியின் கீழ் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தி அறிவித்துள்ள நிலையில், இந்த உயர்வு பால் உற்பத்தியாளர்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் பெருமாள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: தமிழக முதல்வர் இன்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு ரூ.1 கொள்முதல் விலை உயர்வும், ரூ.2 ஊக்கத்தொகையும் என மொத்தம் ரூ.3 உயர்வு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். பால் உற்பத்தியாளர்கள் லிட்டருக்கு […]

August 19, 2026 Editor
ராசிபுரம் அருகே 20-க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் சிறைபிடிப்பு. ராசிபுரம்

ராசிபுரம் அருகே 20-க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் சிறைபிடிப்பு.

ராசிபுரம் அருகே பாச்சல் ஏரியில் இருந்து வண்டல் மண் எடுத்துச் சென்றதாக கூறி, 20-க்கும் மேற்பட்ட டிராக்டர்களை பொதுமக்கள் மற்றும் பா.ஜ.க.வினர் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பாச்சல் பகுதியில் சுமார் 182 ஏக்கர் பரப்பளவில் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் இருந்து வண்டல் மண் எடுக்க சில விவசாயிகள் அரசிடம் அனுமதி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த சில நாட்களாக ஏரியில் இருந்து தினமும் 100-க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் வண்டல் மண் […]

August 19, 2026 Editor
தேசிய புகைப்பட தினம்: குமாரபாளையத்தில் புகைப்பட கலைஞர்கள் விழிப்புணர்வு வாகன பேரணி. குமாரபாளையம்

தேசிய புகைப்பட தினம்: குமாரபாளையத்தில் புகைப்பட கலைஞர்கள் விழிப்புணர்வு வாகன பேரணி.

தேசிய புகைப்பட தினத்தை முன்னிட்டு, குமாரபாளையத்தில் புகைப்பட கலைஞர்கள் சங்கம் சார்பில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் மற்றும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு வாகன பேரணி நடைபெற்றது. ஆண்டுதோறும் ஆகஸ்ட் 19-ம் தேதி தேசிய புகைப்பட தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுகா புகைப்பட கலைஞர்கள் சங்கம் சார்பில் விழிப்புணர்வு வாகன பேரணி நடத்தப்பட்டது. குமாரபாளையம் குளத்துக்காடு பகுதியில் இருந்து தொடங்கிய பேரணியை காவல் ஆய்வாளர் தாமரைச்செல்வன் கொடியசைத்து […]

August 19, 2026 Editor
ராசிபுரம் அருகே நள்ளிரவில் ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் நடமாட்டம்: சிசிடிவி காட்சிகள் வைரல். ராசிபுரம்

ராசிபுரம் அருகே நள்ளிரவில் ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் நடமாட்டம்: சிசிடிவி காட்சிகள் வைரல்.

ராசிபுரம் அருகே நள்ளிரவில் முகமூடி அணிந்தபடி ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் சுற்றித்திரிந்ததாக கூறப்படும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கூனவேலம்பட்டி புதூர் ஊராட்சிக்குட்பட்ட தோணமேடு பகுதியில், நேற்று முன்தினம் நள்ளிரவில் முகமூடி அணிந்த சில மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் அப்பகுதியில் உள்ள வீடுகளை நோட்டமிட்டபடி நடந்து சென்ற காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளன. மேலும், […]

August 19, 2026 Editor