32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

மோகனூர் சிப்காட் திட்டத்தை ரத்து செய்ய கோரி அமைச்சரிடம் விவசாயிகள் மனு!

Editor Published: May 17, 2026 1 நிமிட வாசிப்பு Updated: May 20, 2026 Breaking News
எழுத்து அளவு:
செய்தியைக் கேட்க / Listen to News

நாமக்கல் மாவட்டம், மோகனூர் தாலுகாவில் முப்போகம் விளையும் விவசாய நிலங்களை அழித்து சிப்காட் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்யவலியுறுத்தி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

விவசாய முன்னேற்றக் கழகத் தலைவர் பாலசுப்ரமணியம் தலைமையிலான சிப்காட் எதிர்ப்பு குழுவினர் அளித்த அந்த மனுவில்கூறப்பட்டுள்ளதாவது:

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

மோகனூர் தாலுகாவிற்கு உட்பட்ட வளையப்பட்டி, நா.புதுப்பட்டி, அரூர் ஆகிய பகுதிகளில் சிப்காட் நிறுவனம் அமைப்பதற்காக கடந்த ஆட்சி காலத்தில் அரசாணை வெளியிடப்பட்டது. இதற்காக, அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளின் சுமார் 483 ஏக்கர் முப்போகம் விளையும்செழிப்பான விவசாய நிலங்களை கையகப்படுத்த தீவிர முயற்சிகள் நடந்து வருகின்றன. இத்திட்டம் நிறைவேறினால் 300-க்கும் மேற்பட்டகுடும்பங்கள் நேரடியாகவும், சுமார் 15,000 குடும்பங்கள் மறைமுகமாகவும் தங்களது வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயம் உள்ளது. விவசாயநிலங்களை பாதுகாக்க வலியுறுத்தி இதுவரை 170-க்கும் மேற்பட்ட அறவழிப் போராட்டங்களையும், 800 நாட்களுக்கும் மேலாக தொடர்காத்திருப்புப் போராட்டத்தையும் நாங்கள் நடத்தி உள்ளோம்.

சிப்காட் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள இப்பகுதியில் சுமார் 150 ஏக்கருக்கும் மேல் மலை மற்றும் மலைக்குன்றுகள், 40-க்கும் மேற்பட்டதடுப்பணைகள், 70-க்கும் மேற்பட்ட நீரோடைகள் உள்ளன.4 கிராம மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் கிணறுகள் மற்றும்ஆழ்துளைக் கிணறுகள் இங்குதான் அமைந்துள்ளன. மேலும், கால்நடைகளுக்கான 160 ஏக்கர் மேய்ச்சல் புறம்போக்கு நிலங்களும் உள்ளன. 4 பெரிய ஏரிகள் உள்ளன. 50,000-க்கும் மேற்பட்ட மரங்கள் இருப்பதோடு, இது மான்கள் அதிகம் வாழும் பகுதியாகவும்திகழ்கிறது.எல்லாவற்றிற்கும் மேலாக, 1000 ஆண்டுகள் பழமையான பாரம்பரியமிக்க கோயில்கள் இங்கு அமைந்துள்ளன. தொழிற்சாலைகள்வந்தால் இவை அனைத்தும் அழியும் நிலை ஏற்படும்.

இப்பகுதியில் சிப்காட் அமைப்பதன் முக்கிய நோக்கமே அரசியல் வாதிகள் மற்றும் அவரது குடும்பத்தினரின் சுயலாபத்திற்காகத்தான்அவர்களின் பிடியில் உள்ள ஆக்கிரமிப்பு நிலங்களை மீண்டும் சிப்காட் நிறுவனத்திடமே ஒப்படைத்து, அதன் மூலம் சுமார் 50 கோடி ரூபாய்லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு சிப்காட் அமைக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனவே, அமைச்சர் அவர்கள் இந்த விவகாரத்தை தமிழக முதல்வர் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு செல்ல வேண்டும். இயற்கை வளங்கள்நிறைந்த, முப்போகம் விளையக்கூடிய விவசாய நிலங்களை அழித்து உருவாக்கப்படும் இந்த சிப்காட் திட்டத்தை முழுமையாக ரத்து செய்யது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை திட பேருதவி புரிய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜிடம் மோகனூர் சிப்காட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

About The Author

உடனடி செய்திகள்