32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

பள்ளிபாளையம் ஒன்றிய முன்னாள் சேர்மன் பாலு காலமானார்.

Editor Published: September 30, 2026 1 நிமிட வாசிப்பு குமாரபாளையம்
எழுத்து அளவு:

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே வெடியரசம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபரும், திமுக பிரமுகருமான பாலு (எ) ‘கொக்கு பாலு’ உடல்நலக் குறைவால் இன்று அதிகாலை காலமானார்.

ஜவுளி மற்றும் நூற்பாலை தொழிலில் ஈடுபட்டு வந்த பாலு, பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராக இரண்டு முறை பதவி வகித்துள்ளார். 1996–2001 மற்றும் 2006–2011 காலகட்டங்களில் ஒன்றியக் குழுத் தலைவராகவும், மற்ற இரு காலகட்டங்களில் ஒன்றியக் குழு உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.

2026 சட்டமன்றத் தேர்தலில் குமாரபாளையம் தொகுதியில் திமுக வேட்பாளராக எஸ். பாலு போட்டியிட்டார்.

உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பிய நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்தார்.

உள்ளாட்சித் தேர்தலில் கொக்கு சின்னத்தில் போட்டியிட்டதால் கொக்கு பாலு என அழைக்கப்பட்டார்.

பாலு மறைவுக்கு திமுக நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள், தொழில் துறையினர் மற்றும் பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

About The Author