32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

வெப்படை காவல் நிலைய புதிய இன்ஸ்பெக்டராக வளர்மதி பொறுப்பேற்பு.

Editor Published: August 19, 2026 1 நிமிட வாசிப்பு குமாரபாளையம்
எழுத்து அளவு:

பள்ளிபாளையம் அருகே உள்ள வெப்படை காவல் நிலையத்தின் புதிய காவல் ஆய்வாளராக (இன்ஸ்பெக்டர்) வளர்மதி பொறுப்பேற்றுக் கொண்டார்.

வெப்படை காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த சங்கீதா, புதுச்சத்திரம் காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து ஏற்பட்ட காலிப் பணியிடத்திற்கு, திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த வளர்மதி, வெப்படை காவல் நிலைய இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து புதிய இன்ஸ்பெக்டராக வளர்மதி பொறுப்பேற்றுக் கொண்டு, காவல் நிலையத்தின் பணிகளை மேற்கொண்டார்.

புதிதாக பொறுப்பேற்ற இன்ஸ்பெக்டர் வளர்மதிக்கு, காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள் மற்றும் சக காவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

About The Author