32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

திருச்செங்கோடு சின்ன ஓங்காளியம்மன் கோவிலில் 1008 கிலோ குங்கும அலங்காரம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்.

Editor Published: August 14, 2026 1 நிமிட வாசிப்பு ஆன்மீகம்
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க / Listen to News


விளம்பரம்
VMTalks In-article Ad Slot


ஆடி மாதத்தின் 5-வது மற்றும் கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, திருச்செங்கோடு சின்ன ஓங்காளியம்மன் கோவிலில் ஓங்காளியம்மனுக்கு 1008 கிலோ குங்குமத்தால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

ஆடி மாதத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்படுவது வழக்கம். அதன்படி, இன்று அம்மன் 1008 கிலோ குங்குமத்தை மலைபோல் குவித்து, அதன் நடுவே எழுந்தருளியவாறு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

சிறப்பு பூஜைகளைத் தொடர்ந்து, அம்மனை தரிசிக்க ஆயிரக்கணக்கான பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு குங்கும பிரசாதமும் வழங்கப்பட்டது. இதனால் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் பரபரப்பாக காணப்பட்டது.

About The Author

உடனடி செய்திகள்