32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

திருச்செங்கோட்டில் ஹெல்மெட் விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி: 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு.

Editor Published: August 14, 2026 1 நிமிட வாசிப்பு திருச்செங்கோடு
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க / Listen to News


விளம்பரம்
VMTalks In-article Ad Slot


80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஹெல்மெட் அணிவதன் அவசியம் மற்றும் வீடுதோறும் தேசியக்கொடி ஏற்றுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனங்கள் சார்பில் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.

திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி முன்பு தொடங்கிய பேரணியை, திருச்செங்கோடு டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திவ்யா கொடியசைத்து தொடங்கி வைத்தார். போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத், தனிப்பிரிவு எஸ்.ஐ ரவிக்குமார் உள்ளிட்ட போலீசார் மற்றும் கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மோகன், கல்லூரிகளின் முதல்வர்கள் கோபிநாத், கார்த்திகேயன், கோபலகிருஷ்ணன், பிரச்சன்ன ராஜேஸ்குமார், சுரேஷ்பாபு, சரத் அசோகன்,ரத்னவேலு,உத்ராமணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற பேரணி, கே.எஸ்.ஆர் கல்வி நிறுவன வளாகத்தில் நிறைவடைந்தது. பேரணியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரி அலுவலர்கள் ஹெல்மெட் அணிந்து பங்கேற்றனர்.

பேரணியில், இருசக்கர வாகனங்களில் பயணிக்கும்போது கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும், வீடுதோறும் தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

About The Author

உடனடி செய்திகள்