செய்தியைக் கேட்க / Listen to News

ஆடி மாதத்தின் 4-வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, திருச்செங்கோடு சின்ன ஓங்காளியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை வளையல் அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து வழிபட்டனர்.
ஆடி வெள்ளியை முன்னிட்டு கோயிலில் அதிகாலை முதலே பக்தர்கள் திரளாக குவிந்தனர். பக்தர்கள் வளையல், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பூஜைப் பொருட்களை சமர்ப்பித்து அம்மனை வழிபட்டனர்.
இதனால், கோயில் வளாகம் முழுவதும் பக்தி பரவசமான சூழல் நிலவியது.