
அதிகரிக்கும் நோக்கில், தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் மற்றும் தேசிய உணவு பாதுகாப்பு, ஊட்டச்சத்து இயக்கம் 2026-27 திட்டங்களின் கீழ் மக்காச்சோளம் செயல்விளக்கத் திடல்கள் அமைக்க மானியம் வழங்கப்பட்டு வருவதாக வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஜெயமாலா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ரூ.11,500 மதிப்பிலான இடுபொருட்கள்
2.5 ஏக்கர் நிலம் உள்ள விவசாயிகள் செயல்விளக்கத் திடல் அமைத்து, ரூ.11,500 மதிப்பிலான இடுபொருட்களை மானியமாகப் பெறலாம்.
ஒரு ஹெக்டேர் நிலத்திற்கு 15 கிலோ வீரிய மக்காச்சோள விதை, நுண்ணூட்டம் 12.5 கிலோ, உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா உள்ளிட்டவையும், படைப்புழுவை கட்டுப்படுத்தும் உயிரியல் காரணியான மெட்டாரைசியம் அனிசோபிலியே 4 கிலோ, மக்காச்சோளம் மேக்சிம் 15 கிலோ உள்ளிட்ட இடுபொருட்களும் வழங்கப்படும்.
விதைக்கு கிலோ ரூ.100 மானியம்
மேலும், மக்காச்சோளம் விதை விநியோகத் திட்டத்தின் கீழ் ஒரு கிலோ விதைக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தில் குறைந்தபட்சம் 1 ஏக்கர் முதல் அதிகபட்சம் 2.5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகள் பயன்பெறலாம்.
விவசாயிகள் பதிவு செய்யலாம்
மக்காச்சோள விதை தேவைப்படும் விவசாயிகள், தங்களது ஆதார் நகல், சிட்டா மற்றும் குடும்ப அட்டை நகல் ஆகியவற்றுடன் எலச்சிப்பாளையம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ள உதவி வேளாண் அலுவலர் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர்களை அணுகி பதிவு செய்து பயன்பெறலாம்.
இவ்வாறு எலச்சிப்பாளையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஜெயமாலா தெரிவித்துள்ளார்.