
பிரதோஷத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஸ்ரீ கைலாசநாதர் கோயிலில் கைலாசநாதர் மற்றும் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.
இதையொட்டி, சுவாமி மற்றும் நந்தி பகவானுக்கு பால், தயிர், மஞ்சள், கரும்புச்சாறு, பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து, நந்தி பகவானுக்கு வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
பிரதோஷ வழிபாட்டில் ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.