செய்தியைக் கேட்க / Listen to News
மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் 8-வது ஆண்டு நினைவு நாளையொட்டி, திருச்செங்கோடு கிழக்கு மற்றும் மேற்கு நகர தி.மு.க. சார்பில் மௌன அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது.
பழைய பஸ் ஸ்டாண்ட் அண்ணா சிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்திற்கு நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், பரமத்தி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.எஸ். மூர்த்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, மேற்கு நகர தி.மு.க. செயலாளர் நடேசன், கிழக்கு நகர தி.மு.க. செயலாளர் கார்த்திகேயன், நாமக்கல் மேற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு, திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு, நகர்மன்ற உறுப்பினர்கள், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் வட்டூர் தங்கவேல், நகர தி.மு.க. நிர்வாகிகள், இளைஞர் அணி, மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து, பழைய பஸ் ஸ்டாண்ட் அண்ணா சிலை அருகே இருந்து நகராட்சி வளாகம் வரை மௌன அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது. பின்னர், நகராட்சி வளாகம் அருகே நகர்மன்ற தலைவர் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் சார்பில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்திற்கும் தி.மு.க.வினர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.