32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

குமாரபாளையம் புதிய தாசில்தார் கே. கீதா பொறுப்பேற்பு.

Editor Published: October 1, 2026 1 நிமிட வாசிப்பு குமாரபாளையம்
எழுத்து அளவு:

நிர்வாக காரணங்களுக்காக நாமக்கல் மாவட்டத்தில் 4 தாசில்தார்கள் சமீபத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

அதன்படி, நாமக்கல் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரின் நேர்முக உதவியாளராக பணியாற்றி வந்த கே. கீதா, குமாரபாளையம் தாசில்தாராக நியமிக்கப்பட்டார். குமாரபாளையம் தாசில்தாராக பணியாற்றி வந்த சி. பிரகாஷ், நாமக்கல் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரின் நேர்முக உதவியாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இதையடுத்து, கே. கீதா இன்று குமாரபாளையம் தாசில்தாராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு துறை அலுவலர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

About The Author