32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

திருச்செங்கோடு அருகே கஜசிர விநாயகருக்கு வரலட்சுமி அலங்காரம்.

Editor Published: August 21, 2026 1 நிமிட வாசிப்பு ஆன்மீகம்
எழுத்து அளவு:

வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு, திருச்செங்கோடு அருகே சீத்தாராம்பாளையம் கொள்ளுமேடு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கஜசிர கணபதி கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

இதையொட்டி, கஜசிர விநாயகருக்கு வரலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு வரலட்சுமி பூஜை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

பெண்கள் வரலட்சுமி அம்மன் சிலையின் முன்பு புதிய சேலை, மஞ்சள் கயிறு மற்றும் வளையல்கள் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர். தொடர்ந்து, பெண்கள் பக்தியுடன் பூஜையில் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

பூஜையைத் தொடர்ந்து கோயில் வளாகத்தில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து, அன்னதானத்தில் பங்கேற்றனர்.

About The Author