32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

Tag: <span>ஆடி அமாவாசை</span>

ராசிபுரம் அருகே ஸ்ரீ சண்டி கருப்பசாமி கோயிலில் பிடிகாசு வழங்கும் விழா: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு. ஆன்மீகம்

ராசிபுரம் அருகே ஸ்ரீ சண்டி கருப்பசாமி கோயிலில் பிடிகாசு வழங்கும் விழா: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த அரியாகவுண்டம்பட்டி பகுதியில் உள்ள 33 அடி ஸ்ரீ சண்டி கருப்பசாமி மற்றும் ஸ்ரீ நாககன்னி கோயிலில், 22-ம் ஆண்டு ஆடி அமாவாசையை முன்னிட்டு பிடிகாசு வழங்கும் விழா விமரிசையாக நடைபெற்றது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விழாவில், பக்தர்களுக்கு பிடிகாசு வழங்குவது வழக்கம். பிடிகாசு பெற்றால் செல்வம் பெருகும், கடன் பிரச்னைகள் நீங்கி தொழில் சிறக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. விழாவையொட்டி 108 மூலிகைகளைக் கொண்டு கணபதி ஹோமம், செல்வம் செழிக்க […]

August 12, 2026 Editor
ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு ஆயிரம் கண் அலங்காரம்; ஏராளமான பக்தர்கள் தரிசனம். ஆன்மீகம்

ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு ஆயிரம் கண் அலங்காரம்; ஏராளமான பக்தர்கள் தரிசனம்.

ஆடி அமாவாசையை முன்னிட்டு, ராசிபுரத்தில் உள்ள ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு ஆயிரம் கண் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு வந்த நிலையில், ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆயிரம் கண்கள் கொண்ட அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையொட்டி ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் […]

August 12, 2026 Editor
ஆடி அமாவாசை: மோகனூர் காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் – ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி வழிபாடு. ஆன்மீகம்

ஆடி அமாவாசை: மோகனூர் காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் – ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி வழிபாடு.

ஆடி அமாவாசையை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டம் மோகனூர் காவிரி ஆற்றுப்படுகையில் இன்று அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். ஆடி அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதன் மூலம் தீமைகள் நீங்கி நன்மைகள் ஏற்படும் என்பது இந்து சமய நம்பிக்கையாக உள்ளது.  இதையொட்டி மோகனூர் காவிரி ஆற்றில் பொதுமக்கள் புனித நீராடி, தங்களது முன்னோர்களை நினைத்து பிண்டம், எள் உள்ளிட்டவற்றை வைத்து தர்ப்பணம் செய்தனர். தொடர்ந்து முன்னோர்களுக்கு பூஜைகள் செய்து […]

August 12, 2026 Editor
உடனடி செய்திகள்