32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

விஜயகாந்த் பிறந்தநாள்: நாமக்கல் வடக்கு மாவட்டத்தில் 25 ஆயிரம் பேருக்கு அன்னதானம்.

Editor Published: August 26, 2026 1 நிமிட வாசிப்பு திருச்செங்கோடு
எழுத்து அளவு:

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு, நாமக்கல் வடக்கு மாவட்டம் முழுவதும் கட்சி சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் சுமார் 25 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தேமுதிக நாமக்கல் வடக்கு மாவட்ட செயலாளர் விஜய் சரவணன் தலைமையில், ஆகஸ்ட் 25-ம் தேதி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விஜயகாந்த் பிறந்தநாள் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதுடன், பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிகளில் மாவட்ட அவைத் தலைவர் சௌந்தரராஜன், பொருளாளர் மகாலிங்கம், துணை செயலாளர்கள் பாலச்சந்தர், சக்திவேல், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், நாகராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் பாலு, மந்திரி, செல்வம் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும், ராசிபுரம் தொகுதி பொறுப்பாளர் சேகர், தொழிற்சங்க பேரவை நிர்வாகி செல்வராஜ், ராசிபுரம் நகர செயலாளர் இளையராஜா, திருச்செங்கோடு நகர செயலாளர் குணசேகரன், குமாரபாளையம் நகர செயலாளர் நாராயணசாமி, பள்ளிபாளையம் நகர செயலாளர் வெள்ளியங்கிரி உள்ளிட்ட நகர, ஒன்றிய மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கட்சி நிர்வாகிகள், அணிகளின் பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு விஜயகாந்த் பிறந்தநாளை கொண்டாடினர்.

About The Author