32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

Tag: <span>Thiruchengode News</span>

திருச்செங்கோட்டில் நள்ளிரவில் விபத்து; கார் – இருசக்கர வாகனம் மோதி இளைஞர் உயிரிழப்பு Breaking News

திருச்செங்கோட்டில் நள்ளிரவில் விபத்து; கார் – இருசக்கர வாகனம் மோதி இளைஞர் உயிரிழப்பு

திருச்செங்கோடு வாலரைகேட் பகுதியில் நள்ளிரவில் கார் மற்றும் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குமரமங்கலத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் அபிஷேக் (29), தனது நண்பர் பார்த்திபன் உடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில், அபிஷேக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் பயணித்த பார்த்திபன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். சம்பவம் குறித்து […]

August 4, 2026 Editor
திருச்செங்கோட்டில் வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கு ரத்து; பல்வேறு அமைப்புகள் ஆர்ப்பாட்டம் Breaking News

திருச்செங்கோட்டில் வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கு ரத்து; பல்வேறு அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

திருச்செங்கோடு 31-வது வார்டு கவுன்சிலர் முருகேசனுக்கும், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த தினேஷுக்கும் இடையே கடந்த மே மாதம் குடிநீர் குழாய் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் பதிவு செய்யப்பட்டிருந்த வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து, பல்வேறு அமைப்புகள் திருச்செங்கோட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. கடந்த மே மாதம் குடிநீர் குழாய் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, தினேஷ் சாதிப் பெயரை கூறி அவதூறாக பேசியதாக கவுன்சிலர் முருகேசன் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் […]

July 28, 2026 Editor
திருச்செங்கோடு பஸ் ஸ்டாண்டில் அதிர்ச்சி; காலாவதியான கூல்டிரிங்க்ஸ் விற்பனை? நடவடிக்கை எடுக்குமா உணவு பாதுகாப்புத்துறை? Breaking News

திருச்செங்கோடு பஸ் ஸ்டாண்டில் அதிர்ச்சி; காலாவதியான கூல்டிரிங்க்ஸ் விற்பனை? நடவடிக்கை எடுக்குமா உணவு பாதுகாப்புத்துறை?

திருச்செங்கோடு புதிய பஸ் ஸ்டாண்டில் உள்ள சில கடைகளில் காலாவதியான குளிர்பானங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால், உணவு பாதுகாப்புத்துறை உடனடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. திருச்செங்கோடு புதிய பஸ் ஸ்டாண்டிற்கு சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும், சுற்றுவட்டார கிராமங்களிலிருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்களின் தேவைக்காக பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த […]

July 27, 2026 Editor
மாற்று இடம் கேட்டு போராடும் மக்களை சந்தித்த டில்லிபாபு… அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதி. Breaking News

மாற்று இடம் கேட்டு போராடும் மக்களை சந்தித்த டில்லிபாபு… அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதி.

திருச்செங்கோடு அருகே இலுப்பிலி கிராமம் குளத்துவளவு பகுதியில், மாற்று இடம் கோரி போராடி வரும் பொதுமக்களை முன்னாள் அரூர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவருமான பி. டில்லிபாபு நேரில் சந்தித்து அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தார். இலுப்பிலி கிராமம் குளத்துவளவு பகுதியில் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. குடியிருப்பை ஒட்டியுள்ள சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி, மழைக்காலங்களில் நிரம்பி வழிவதால் குடியிருப்பு பகுதிக்குள் மழைநீர் புகுந்து, வீடுகளின் […]

July 27, 2026 Editor
திருச்செங்கோட்டில் தங்க நகை மோசடி புகார்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் Breaking News

திருச்செங்கோட்டில் தங்க நகை மோசடி புகார்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

திருச்செங்கோடு நகராட்சி 7-வது வார்டு, தொண்டிக்கரடு பகுதியைச் சேர்ந்த நடராஜன் என்பவர், தனது 11¾ பவுன் (சுமார் 94 கிராம்) தங்க நகையை ரூ.2.50 லட்சம் கடனுக்காக அடமானமாக வழங்கியதாகவும், பின்னர் பணத்தை திருப்பிச் செலுத்திய பிறகும் நகையை மீண்டும் வழங்க மறுப்பதாகவும் புகார் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் தன்னை சாதிப் பெயரை கூறி அவமதித்ததுடன், தாக்கியும் மிரட்டியும் தங்க நகையை மோசடி செய்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையம், மாவட்ட […]

July 26, 2026 Editor
பட்டை நாமம் பூசி அரைநிர்வாண போராட்டம்; அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து 3 நாள் போராட்டம் வாபஸ். Breaking News

பட்டை நாமம் பூசி அரைநிர்வாண போராட்டம்; அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து 3 நாள் போராட்டம் வாபஸ்.

திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், எலச்சிபாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட இலுப்பிலி கிராமம் குளத்துவளவு பகுதியில், மாற்று வீட்டுமனை வழங்கக் கோரி 3-வது நாளாக பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பட்டை நாமம் பூசி அரைநிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். இலுப்பிலி கிராமத்தில் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். குடியிருப்பு பகுதிக்கு அருகில் உள்ள சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி கடந்த ஏழு ஆண்டுகளாக தொடர்ந்து நிரம்பி வழிவதால், மழைக்காலங்களில் […]

July 25, 2026 Editor
விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதம்- திருச்செங்கோட்டில் பரபரப்பு. Breaking News

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதம்- திருச்செங்கோட்டில் பரபரப்பு.

திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கோட்டத்திற்கு உட்பட்ட பரமத்தி வேலூர், திருச்செங்கோடு மற்றும் குமாரபாளையம் வட்டார விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம், திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆர்டிஓ லெனின் தலைமை தாங்கினார். இதில் வேளாண்மை, தோட்டக்கலை, வருவாய்த் துறை, நகராட்சி நிர்வாகம், ஊராட்சி ஒன்றியம், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை, கனிமவளத் துறை, வட்டாரப் போக்குவரத்துத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய விவசாயிகள், அதிகாரிகள் தங்களது கோரிக்கைகளை காது […]

July 25, 2026 Editor
மாற்று இடம் கோரி ஏரியில் இறங்கி போராட்டம்: இலுப்பிலி கிராம மக்கள் அவதி Breaking News

மாற்று இடம் கோரி ஏரியில் இறங்கி போராட்டம்: இலுப்பிலி கிராம மக்கள் அவதி

திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஒன்றியம் இலுப்பிலி கிராமத்தில் உள்ள அருந்ததியர் தெருவில் வசிக்கும் 35-க்கும் மேற்பட்ட குடும்பங்கள், கடந்த ஐந்து ஆண்டுகளாக மழைநீர் சூழ்ந்து குடியிருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். சாலைகள் சேதமடைதல், வீடுகள் இடிந்து விழுதல், பாம்புகள் நடமாட்டம் மற்றும் குழந்தைகளுக்கு தொற்றுநோய் பாதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளால் அவதிப்படும் பொதுமக்கள், தங்களுக்கு மாற்று இடம் வழங்கக் கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டினர். இதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் […]

July 25, 2026 Editor
70 ஆண்டு கால கனவு நனவாகுமா? காவிரி – திருமணிமுத்தாறு இணைப்புத் திட்டம் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் அருண்ராஜ் ஆலோசனை Breaking News

70 ஆண்டு கால கனவு நனவாகுமா? காவிரி – திருமணிமுத்தாறு இணைப்புத் திட்டம் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் அருண்ராஜ் ஆலோசனை

சென்னை / திருச்செங்கோடு: திருச்செங்கோடு மக்களின் நீண்டநாள் கோரிக்கையான காவிரி – திருமணிமுத்தாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக, அமைச்சர் அருண்ராஜ் சென்னை தலைமைச் செயலகத்தில் நீர்வளத்துறை அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். திருச்செங்கோடு தொகுதியில் வறண்டு கிடக்கும் ஏரிகளை காவிரி உபரி நீரால் நிரப்பும் வகையில், காவிரி – திருமணிமுத்தாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது இப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகளின் 70 ஆண்டு கால கோரிக்கையாக இருந்து வருகிறது. பல தேர்தல்களில் இந்தத் […]

May 20, 2026 Editor
உடனடி செய்திகள்