நாமக்கல்
இன்று முதல் அமல், ஹெல்மெட் இல்லாமல் இனி வாகனம் ஓட்டினால் ஆன்லைனில் அபராதம்.
நாமக்கல் மாநகரில் போக்குவரத்து விதிமீறல்களை கண்காணிக்கும் வகையில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன ஏஐ கேமராக்கள் இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகின்றன. இதன் மூலம் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட விதிமீறல்களுக்கு ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில், நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட சேலம் சாலை – திருச்செங்கோடு சாலை சந்திப்பில் கடந்த மாதம் 4 அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டன. இந்த கேமராக்கள் செயற்கை நுண்ணறிவு ANPR (Automatic […]