நாமக்கல்
நாமக்கல் மாநகராட்சியில் தெருநாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம்.
நாமக்கல் மாநகராட்சி, மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் ரோட்டரி சங்கங்கள் இணைந்து, தெருநாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி செலுத்தும் முகாமை நாமக்கல்லில் நடத்தின. நிகழ்ச்சிக்கு நாமக்கல் எம்எல்ஏ திலீப் தலைமை வகித்தார். மாநகராட்சி கமிஷனர் செல்வபாலாஜி முன்னிலை வகித்தார். இதையடுத்து மாநகராட்சி பணியாளர்கள் மூலம் தெருக்களில் சுற்றித்திரிந்த நாய்கள் பிடிக்கப்பட்டு, அவற்றுக்கு வெறிநாய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. ரேபிஸ் நோய் பரவலை தடுப்பதுடன், தெருநாய்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தலை குறைக்கும் நோக்கில் இந்த முகாம் நடத்தப்பட்டது. நாமக்கல் மாநகராட்சி […]