vmtalks.com ⚡ AMP

திருச்செங்கோட்டில் வீட்டிற்குள் சிக்கிய தாய் – மகள்; தீயணைப்புத் துறையினர் மீட்டனர்

By Editor | Aug 06, 2026

திருச்செங்கோடு அருகே சுண்டமேடு நாடார் காலனி பகுதியில், வீட்டின் கதவு எதிர்பாராத விதமாக உள்தாழ்ப்பாள் விழுந்து பூட்டிக்கொண்டதால் வீட்டிற்குள் சிக்கிய தாய் மற்றும் மகளை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.

சுண்டமேடு நாடார் காலனியைச் சேர்ந்த அனுராதா என்பவரின் மகள் காவியா (28) மற்றும் அவரது மகள் கவிஸ்ரீ (11) ஆகியோர் வீட்டிற்குள் இருந்தபோது, கதவு திடீரென உள்தாழ்ப்பாள் விழுந்து பூட்டிக்கொண்டது. இதனால் இருவரும் வெளியே வர முடியாமல் தவித்தனர்.

இதுகுறித்து திருச்செங்கோடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர், சிறப்பு மீட்பு உபகரணங்களின் உதவியுடன் கதவை திறந்து, காவியா மற்றும் சிறுமி கவிஸ்ரீ ஆகிய இருவரையும் எவ்வித காயமும் இன்றி பாதுகாப்பாக மீட்டனர்.

துரிதமாக செயல்பட்டு இருவரையும் பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு அப்பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.