தமிழக முதல்வர் ஜோசப் விஜய் உத்தரவின் பேரில், மருத்துவம், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் விழாவில் கலந்து கொண்டு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணை அமைச்சர் அனுப்பிரியா பட்டேல் அவர்களிடம் இருந்து ‘சிறந்த மாநிலத்திற்கான விருதை‘ பெற்றுக் கொண்டார்.
தொடர்ந்து, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் சிறப்பாக செயல்பட்டு வரும் மருத்துவர்கள், மருத்துவமனைகள், Transplant Coordinators, Grief Counsellors மற்றும் தமிழக அரசின் 35 உறுப்பு மீட்டெடுப்பு மையங்களில் (Non-Transplant Organ Retrieval Centres) பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தமிழக அரசின் சார்பில் அமைச்சர் பாராட்டு மற்றும் வாழ்த்துகளை தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் புன்யா சலிலா ஸ்ரீவஸ்தவா, தமிழ்நாடு தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் டாக்டர் அனீஷ் சேகர், தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர் டாக்டர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.