மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தாசில்தார் அலுவலகம் மற்றும் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டி அவர்கள் இந்த தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அலுவலக வளாகத்தில் திடீரென போராட்டம் நடைபெற்றதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தங்களது கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.