vmtalks.com ⚡ AMP

வெயிலின் தாக்கத்தால் தென்னையில் நோய் தாக்குதல்: விவசாயிகளுக்கு சிறப்புப் பயிற்சி!

By Editor | May 17, 2026

திருச்செங்கோடு வட்டாரத்தில் வெயிலின் தாக்கத்தால் தென்னை மரங்களில் பூச்சிகள் தாக்குதல் அதிகரித்துள்ளதையடுத்து, விவசாயிகளுக்குசிறப்பு தொழில்நுட்பப் பயிற்சி முகாம் நடைபெற்றது.

திருச்செங்கோடு வட்டாரத்தில் 1387 எக்டர் பரப்பளவில் தென்னையும், 451 எக்டர் பரப்பளவில் மா சாகுபடியும் செய்யப்பட்டுள்ளது. தற்போதுகோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், தென்னையில் பூச்சிகள் அதிக அளவில் பரவி வருகின்றன. இது குறித்து ஓ.ராஜபாளையம்கிராம விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, மாசிக்காடு பகுதியில் தென்னை மற்றும் மா சாகுபடிக்கான தொழில்நுட்பப் பயிற்சி முகாம்நடைபெற்றது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

நாமக்கல் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் புவனேஸ்வரி இக்கூட்டத்திற்கு தலைமை வகித்தார். ஆழியார் தென்னை ஆராய்ச்சிநிலைய ஓய்வுபெற்ற பேராசிரியர் ராஜமாணிக்கம் மற்றும் வல்லுநர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் விவசாயிகளுக்குச் சிறப்புப் பயிற்சிஅளித்தனர்.

தென்னைக்கு நாளொன்றுக்கு ஒரு மரத்திற்கு 100 லிட்டர் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். சொட்டுநீர் பாசனம் வழியாகவே உரங்களை அளிக்கவேண்டும். சுருள் வெள்ளை ஈக்களின் தாக்குதல் நெட்டை ரகங்களை விட குட்டை ரகங்களிலேயே அதிகம் காணப்படுகிறது. இவற்றைக்கட்டுப்படுத்த இனக்கவர்ச்சி பொறிகளைப் பயன்படுத்த வேண்டும்; மேலும் ரசாயன மற்றும் இயற்கை கட்டுப்பாடு முறைகளையும் பின்பற்றவேண்டும். இதனைச் சரிசெய்ய துத்தநாக சல்பேட், தாமிர சல்பேட், அயர்ன் சல்பேட், மாங்கனீசு சல்பேட், போராக்ஸ் மற்றும் அம்மோனியம்அல்லது சோடியம் மாலிப்டேட் ஆகியவற்றை தலா 10 கிராம் அளவில் எடுத்து, 10 லிட்டர் தண்ணீரில் கலந்து வேர் வழியாக அளிக்க வேண்டும். குறும்பைகள் கொட்டுவதைத் தடுக்க ‘தென்னை டானிக்’ பயன்படுத்திப் பயன்பெறலாம்.

மா மரங்களில் அதிக பூக்கள் பிடிப்பதற்கும், பிஞ்சுகள் உதிராமல் இருப்பதற்கும் செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்து வல்லுநர்கோபாலகிருஷ்ணன் விளக்கினார். அறுவடைக்குப் பின் தொழுஉரத்துடன் உயிர் உரங்களையும் பயன்படுத்த வேண்டும். ஆகஸ்ட் மற்றும்செப்டம்பர் மாதங்களில் மரங்களை கவாத்து (Pruning) செய்து, வெட்டப்பட்ட கிளைகளில் போர்டாக்ஸ் கலவையைத் தடவ வேண்டும் எனஅறிவுறுத்தினார்.

கூட்டத்தின் நிறைவாக, கோடை வெயிலில் இருந்து பயிர்களைக் காக்கும் தொழில்நுட்பங்கள் மற்றும் கோடைகால சாகுபடியில் லாபம் ஈட்டும்உத்திகள் குறித்து துணை இயக்குநர் புவனேஸ்வரி விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். இம்முகாமில் தோட்டக்கலை உதவி இயக்குநர் சுகன்யாஉள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.