பழந்தின்னிப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் மாவட்ட கலெக்டர் லி.மதுபாலன் தலைமையில், 366 பயனாளிகளுக்கு ரூ.75.48 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை, மகளிர் சுயஉதவிக்குழுக்கள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேளாண்மை, தோட்டக்கலை உள்ளிட்ட துறைகளின் சார்பில் வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், குடும்ப அட்டை, உதவித்தொகை, மகளிர் சுயஉதவிக்குழு கடன், சொட்டுநீர்ப்பாசன மானியம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ஏற்கனவே பெறப்பட்ட 99 மனுக்களில் 70 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், முகாமில் பொதுமக்களிடம் இருந்து புதிய கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, தகுதியான மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார். அரசு திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் பல்வேறு துறைகளின் கண்காட்சி அரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தன.
தொடர்ந்து, இராசிபுரத்தில் பட்டு கைத்தறி கூட்டுறவு சங்கங்களில் பட்டு புடவை நெசவு செய்யும் பணிகளை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு, சிறந்த வடிவமைப்பாளர் விருது பெற்ற நெசவாளர் எம்.பிரேமாவை பாராட்டினார்.