வன வேங்கைகள் கட்சி சார்பில் ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் செல்லமுத்து தலைமை வகித்தார்.
இதையடுத்து, வன வேங்கைகள் கட்சியினர் மற்றும் பழங்குடியின மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்து, சுதந்திரப் போராட்டத்தில் உயிர்நீத்த குறவர் பழங்குடியின வீரர்களின் நினைவாக மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர்.
நிகழ்ச்சியில் பழங்குடியின மக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.