vmtalks.com ⚡ AMP

ராசிபுரம் அருகே நள்ளிரவில் ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் நடமாட்டம்: சிசிடிவி காட்சிகள் வைரல்.

By Editor | Aug 19, 2026

ராசிபுரம் அருகே நள்ளிரவில் முகமூடி அணிந்தபடி ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் சுற்றித்திரிந்ததாக கூறப்படும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கூனவேலம்பட்டி புதூர் ஊராட்சிக்குட்பட்ட தோணமேடு பகுதியில், நேற்று முன்தினம் நள்ளிரவில் முகமூடி அணிந்த சில மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்ததாக கூறப்படுகிறது.

அவர்கள் அப்பகுதியில் உள்ள வீடுகளை நோட்டமிட்டபடி நடந்து சென்ற காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளன. மேலும், அப்பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் இருப்பதை அறிந்ததும் மர்ம நபர்கள் வெவ்வேறு திசைகளில் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரவு நேரங்களில் மர்ம நபர்களின் நடமாட்டம் குறித்து போலீசார் தீவிரமாக கண்காணித்து, இரவு ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.