ராஜவாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படாததால் விவசாயப் பணிகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறிய விவசாயிகள், உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என வலியுறுத்தினர்.
விளம்பரம்
இதையடுத்து பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனையடுத்து அதிகாரிகளுடன் விவசாயிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ராஜவாய்க்காலில் தண்ணீர் திறப்பது தொடர்பாக அதிகாரிகளிடம் விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை எடுத்துரைத்தனர்.
500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒரே நேரத்தில் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.