நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்கள், அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை எளிதாக பெறுவதற்காக கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்றோர் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் லி. மதுபாலன் தெரிவித்துள்ளார்.
கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்றோர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை களைந்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்றோர் நலவாரியம் 2022-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
இதற்கென தனி இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
தமிழகத்தின் கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் வசிக்கும் தகுதியான பெண்கள், தங்களது விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்து நலவாரிய உறுப்பினராகலாம்.
உறுப்பினர்களாக பதிவு செய்யப்பட்டவர்களுக்கு ஓய்வூதியம், தற்காலிக தங்குமிடம், திறன் வளர்ப்பு பயிற்சி, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு உதவிகள் மற்றும் சுயதொழில் தொடங்க ரூ.50 ஆயிரம் வரை மானியம் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை பெற முடியும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நலவாரிய இணையதளம்: