நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட நல்லிபாளையம் ஏரியை தூர்வாரி, கரைகளை பலப்படுத்தி, பனை விதைகள் மற்றும் மரக்கன்றுகள் நடும் பணிகள் தொடங்கப்பட்டன.
‘மிளிரும் நாமக்கல்’ அமைப்பு சார்பில் நல்லிபாளையம் ஏரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் சி.எஸ்.திலீப், மாநகராட்சி ஆணையாளர் சண்.செல்வபாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தனர்.
இதையடுத்து ஏரியை தூர்வாருதல், கரைகளை பலப்படுத்துதல், பனை விதைகள் மற்றும் மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
நிகழ்ச்சியில் ‘மிளிரும் நாமக்கல்’ அமைப்பின் தலைவர் வி.சத்தியமூர்த்தி, செயலாளர் எஸ்.கே.வேல், பொருளாளர் எஸ்.ரங்கநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் பொதுமக்களும் பங்கேற்றனர்.