vmtalks.com ⚡ AMP

நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறையில் 33 பணியிடங்கள்: ஆக.31-க்குள் விண்ணப்பிக்கலாம்.

By Editor | Aug 18, 2026

நாமக்கல் மாவட்டத்தில் தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ் பல்வேறு திட்டங்களில் காலியாக உள்ள 33 பணியிடங்கள், மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் தகுதியான நபர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.

இதன்படி,

பதவி பணியிடங்கள்
சுகாதார ஆய்வாளர் – Gr.II (MPHW) (ஆண்) / Multipurpose Health Worker (Male) – Health Inspector Grade II 30
மாவட்ட தர ஆலோசகர் (District Quality Consultant) 1
ஆடியாலஜிஸ்ட் மற்றும் பேச்சு சிகிச்சையாளர் – DEIC (Audiologist cum Speech Therapist) 1
நடத்தைக்கான சிகிச்சை சிறப்பு கல்வியாளர் – DEIC’s – One Stop Centre (Special Educator for Behavioural Therapy) 1
மொத்தம் 33

மேற்கண்ட பணியிடங்களுக்கான வயது வரம்பு, கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம் மற்றும் இதர தகுதிகள் குறித்த விவரங்கள் நாமக்கல் மாவட்ட இணையதளமான namakkal.nic.in மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, இணை இயக்குநர் நலப்பணிகள் அலுவலகம், மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களின் அறிவிப்பு பலகைகளில் வெளியிடப்படும்.

ஆக.31-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்

தகுதியானவர்கள் உரிய விண்ணப்பப் படிவத்தில் கல்வித்தகுதி, அனுபவச்சான்று மற்றும் தேவையான பிற ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 31.08.2026 அன்று மாலை 5 மணிக்குள் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்:

மாவட்ட சுகாதார அலுவலர் / நிர்வாக செயலாளர்,
மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society),
மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம்,
நாமக்கல் மாவட்டம் – 637003.

இந்த வாய்ப்பை தகுதியானவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு நாமக்கல் மாவட்ட கலெக்டர் மதுபாலன் தெரிவித்துள்ளார்.