vmtalks.com ⚡ AMP

நாமக்கல் அரசு கலைக்கல்லூரியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஓவியக் கண்காட்சி

By Editor | Jul 28, 2026

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில், போதைப்பொருள் தடுப்பு மன்றத்தின் சார்பில் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஓவியக் கண்காட்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் மு. ராஜேஸ்வரி தலைமை வகித்து, போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஓவியக் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

ஈரநிலம் அறக்கட்டளையின் நிறுவனர் . தமிழரசன், போதைப்பொருட்களின் தீமைகள், அவற்றால் ஏற்படும் சமூக, உடல் மற்றும் மனநல பாதிப்புகள், மேலும் போதைப் பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளை விளக்கும் ஓவியங்களை காட்சிப்படுத்தி, மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, போதைப்பொருளுக்கு எதிரான உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக் கொண்டனர். மேலும், போதைப்பொருள்களை பயன்படுத்த மாட்டோம் என்ற உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் மாணவ, மாணவியர்கள் போதைப்பொருளுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்று கையெழுத்திட்டு உறுதியேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில், போதைப்பொருள் தடுப்பு மன்றத்தின் நாமக்கல் மாவட்ட தொடர்பு அலுவலர் ராஜேஷ் கண்ணன், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், ஆசிரியரல்லாத அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை போதைப்பொருள் தடுப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் வெஸ்லி மற்றும் மன்ற உறுப்பினர் சந்திரசேகரன் ஆகியோர் செய்திருந்தனர்.