நாமக்கல்லில் தனியார் கண் மருத்துவமனையின் புதிய கிளை திறப்பு விழா நடைபெற்றது. புதிய மருத்துவமனையை நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திலீப், மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன் உள்ளிட்டோர் திறந்து வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து கண் மருத்துவர் ராமமூர்த்தி கூறுகையில், குழந்தைகள் செல்போன் மற்றும் கணினி உள்ளிட்ட திரை சாதனங்களில் அதிக நேரம் செலவிடுவதால் மையோபியா பாதிப்பு அதிகரித்து வருவதாக தெரிவித்தார்.
எனவே, தேவையின்றி குழந்தைகளிடம் செல்போன் கொடுப்பதை பெற்றோர் தவிர்க்க வேண்டும் என்றும், குழந்தைகளின் திரை பயன்பாட்டு நேரத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
மேலும், குழந்தைகள் சூரிய வெளிச்சத்தில் வெளிப்புற விளையாட்டுகளில் ஈடுபடுவதை பெற்றோர் ஊக்குவிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
நீரிழிவு நோயால் கண்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால், தொடர்ந்து கண் பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் பாதிப்புகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தவிர்க்க முடியும் என்றும் மருத்துவர் ராமமூர்த்தி தெரிவித்தார்.