திருச்செங்கோடு நகரப் பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில், சிறுமி வீட்டின் அருகே தூங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த சரவணன் (29) என்பவர் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி சத்தம் போட்டதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நபர் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், சரவணனை கைது செய்தனர்.
மேலும், அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.