vmtalks.com ⚡ AMP

திருச்செங்கோடு காவல் உட்கோட்ட ஏ.எஸ்.பி.யாக அஸ்வினி பொறுப்பேற்பு.

By Editor | Sep 04, 2026

திருச்செங்கோடு காவல் உட்கோட்டத்தின் புதிய ஏ.எஸ்.பி ஆக அஸ்வினி பொறுப்பேற்றுக் கொண்டார்.

பி.. பட்டதாரியான அஸ்வினி, மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வில் வெற்றி பெற்று .பி.எஸ். அதிகாரியானார். தொடர்ந்து திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பயிற்சி பெற்றார்.

பயிற்சியை நிறைவு செய்த அவர், முதன்முறையாக ஏ.எஸ்.பி ஆக திருச்செங்கோடு காவல் உட்கோட்டத்தில் பொறுப்பேற்றுள்ளார்.

திருச்செங்கோடு காவல் உட்கோட்டத்தில் இதுவரை குரூப் 1 கேடரில் உள்ள டிஎஸ்பிக்கள் மட்டுமே பதவி வகித்து வந்த நிலையில் முதல் முறையாக ஐபிஎஸ் கேடரில் ஏ.எஸ்.பி பதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய பொறுப்பேற்றுள்ள ஏ.எஸ்.பிஅஸ்வினிக்கு காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.