vmtalks.com ⚡ AMP

“உள் இடஒதுக்கீடு விவகாரம்… திருச்செங்கோட்டில் அதியமான் காட்டம்!”

By Editor | Sep 27, 2026

திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ரவுண்டானா பகுதியில், ஆதித்தமிழர் பேரவையின் முன்னாள் நிர்வாகி நீலவேந்தன் நினைவு நாளையொட்டி நாமக்கல் மாவட்ட மாநாடு நடைபெற்றது.

மாநாட்டிற்கு ஆதித்தமிழர் பேரவையின் நாமக்கல் மாவட்டச் செயலாளர் சரவணகுமார் தலைமை வகித்தார். மாநில துணைப் பொதுச் செயலாளர் தமிழரசு வரவேற்புரையாற்றினார். மாநில பொதுச் செயலாளர் கோவை ரவிக்குமார் தொடக்க உரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு பேசினார்.

மாநாட்டில் ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான் பேசுகையில், அருந்ததியர் மக்களுக்கான உள் இடஒதுக்கீடு உள்ளிட்ட சமூகநீதிக் கோரிக்கைகளை முன்னிறுத்தி நீலவேந்தன் மேற்கொண்ட போராட்டம் குறித்து பேசினார்.

மேலும், அருந்ததியர் மக்களுக்கான உள் இடஒதுக்கீடு தொடர்பாக பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் கட்சிகளின் நிலைப்பாடுகள் குறித்து அதியமான் விமர்சனங்களை முன்வைத்தார். குறிப்பாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆகியோர் தொடர்பாகவும் தனது கருத்துகளை தெரிவித்தார்.

மாநாட்டில் ஆதித்தமிழர் பேரவையின் இளைஞர் அணி மாவட்டத் தலைவர் தினேஷ், ஒன்றியச் செயலாளர்கள் மாரிமுத்து, பிரபு என்கிற துரைசாமி, திருச்செங்கோடு ஒன்றியச் செயலாளர் கவியரசன், எலச்சிபாளையம் ஒன்றியச் செயலாளர் சிதம்பரம், மல்லசமுத்திரம் ஒன்றியச் செயலாளர் சுரேஷ், கபிலர்மலை ஒன்றியச் செயலாளர் சங்கர், பள்ளிபாளையம் ஒன்றியச் செயலாளர் கௌதம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.