vmtalks.com ⚡ AMP

திருச்செங்கோடு நகர விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளராக திருநாவுக்கரசு நியமனம்

By Editor | Aug 09, 2026

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருச்செங்கோடு நகர செயலாளராக திருநாவுக்கரசு நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய நகர செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்ட திருநாவுக்கரசு, திருச்செங்கோடு நரிப்பள்ளம் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் முருகன் என்கிற முகிலன், மாவட்ட செய்தி தொடர்பாளர் சரவணன், மாவட்ட துணைச் செயலாளர்கள் குபேந்திரன், மணி, சின்னசாமி, கதிரேசன், சாந்தா, பொருளாளர் ராஜமாணிக்கம், மண்டல துணைச் செயலாளர்கள் பெருமாவளவன், தினேஷ் கார்த்தி, முருகானந்தம், ஒன்றிய செயலாளர் பார்த்திபன், மல்லசமுத்திரம் ஒன்றிய செயலாளர் சோமு என்கிற சோமசுந்தரம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு புதிய நகர செயலாளர் திருநாவுக்கரசுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.