vmtalks.com ⚡ AMP

செப்.29ல் உஞ்சனை, முசிறி, இளநகரில் மின் தடை

By Editor | Sep 27, 2026

நாமக்கல் மின்பகிர்மான வட்டம், திருச்செங்கோடு கோட்டத்திற்கு உட்பட்ட உஞ்சனை, முசிறி மற்றும் இளநகர் ஆகிய 110/22 கி.வோ. துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், 29.09.2026 செவ்வாய்க்கிழமை கீழ்க்கண்ட பகுதிகளில் குறிப்பிட்ட நேரங்களில் மின்சார விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.

உஞ்சனை துணை மின்நிலையம்

மின்தடை நேரம்: காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை.

உஞ்சனை, சாலப்பாளையம், குமரமங்கலம், ஆலாங்காட்டுப்புதூர், சத்தியநாயக்கன்பாளையம், ராயர்பாளையம், பூவாழக்குட்டை, முகாசி, போக்கம்பாளையம், சடையகவுண்டம்பாளையம், 85-கவுண்டம்பாளையம், சமுத்திரம்பாளையம், மோளிப்பள்ளி, மாச்சம்பாளையம், இடையார்பாளையம், டி.கைலாசம்பாளையம், மண்டகபாளையம், கோலாரம் மற்றும் கரிச்சிபாளையம் ஆகிய பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது.

முசிறி துணை மின்நிலையம்

மின்தடை நேரம்: காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை.

அக்கலாம்பட்டி, குப்பகவுண்டன்புதூர், குன்னங்கல்புதூர், கொட்டாம்பட்டி, நாய்கடிபுதூர், சிலுவம்பட்டி, அத்தியம்பாளையம், புரசபாளையம், மாரப்பநாய்க்கன்பட்டி, முசிறி, பள்ளிப்பட்டி, இளையாபுரம், பல்புடுங்கிபாளையம், புத்தூர், வேப்பமரத்துப்புதூர், மணிக்கட்டிபுதூர், கணக்கம்பாளையம், சிங்கலிபட்டி, பொமம்பட்டி, தளிகை, நருவலூர், தொட்டிபாளையம், பாலக்காடு, பொய்யேரிபாளையம், சின்னதளிகை, தட்டராபாளையம் மற்றும் சுப்பநாயக்கானூர் ஆகிய பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது.

இளநகர் துணை மின்நிலையம்

மின்தடை நேரம்: காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை.

வேலகவுண்டம்பட்டி, இளநகர், இலுப்புலி, தொண்டிப்பட்டி, செக்குப்பட்டி, பாளையம், எளையாம்பாளையம், ஜேடர்பாளையம், கூத்தம்பூண்டி, மானத்தி, செருக்கலை, பெரியமணலி, கோக்கலை மற்றும் மாணிக்கம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது.

எனவே, மேற்கண்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு திருச்செங்கோடு இயக்கமும் பராமரிப்பும் செயற்பொறியாளர் (பொறுப்பு) தெரிவித்துள்ளார்.