vmtalks.com ⚡ AMP

நாமக்கல்–திருச்செங்கோட்டுக்கு SEZ அந்தஸ்து வழங்க வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்.

By Editor | Aug 15, 2026

தொழில் வளர்ச்சி மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் முக்கியத்துவம் பெற்றுள்ள நாமக்கல், திருச்செங்கோடு பகுதிகளை சிறப்பு பொருளாதார மண்டலமாக (SEZ) அறிவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தினார்.

திருச்செங்கோட்டில் தனியார் அமைப்பு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அண்ணாமலை, தொழில் வளர்ச்சி தொடர்பாக பேசினார்.

செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருவதாக குறிப்பிட்ட அவர், அதேபோல் தொழில் வளர்ச்சி அடைந்துள்ள திருச்செங்கோடு மற்றும் நாமக்கல் பகுதிகளுக்கும் கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றார்.

நாமக்கல் மாவட்டம் தனிநபர் வருமானத்தில் ரூ.4.40 லட்சம் பெற்று, தமிழகத்தின் 4-வது பெரிய வருவாய் மாவட்டமாக இருப்பதாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.

பொருளாதார வளர்ச்சியை மேலும் அதிகரிக்கவும், உள்ளூர் தொழில் நிறுவனங்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கவும் நாமக்கல்–திருச்செங்கோடு பகுதிகளை சிறப்பு பொருளாதார மண்டலமாக அறிவிப்பது அவசியம் என அவர் கூறினார்.