குளத்துக்காடு பகுதியில் தொடங்கிய பேரணி, ஆனங்கூர் சாலை, பள்ளிபாளையம் சாலை, எடப்பாடி சாலை வழியாக சென்று குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.
விளம்பரம்
பேரணியில் 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று, உடல் உறுப்பு தானத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி கோஷங்களை எழுப்பிச் சென்றனர்.
உடல் உறுப்பு தானம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த பேரணி நடைபெற்றது.