vmtalks.com ⚡ AMP

காந்தி ஜெயந்தி தொடர் விடுமுறை: கூட்ட நெரிசலைத் தவிர்க்க சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.

By Editor | Sep 30, 2026

காந்தி ஜெயந்தி தொடர் விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்க, பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தாம்பரம் – தென்காசி / செங்கோட்டை

தாம்பரம் – தென்காசி சிறப்பு ரயில் (06123) அக்டோபர் 1-ம் தேதி இரவு 11.55 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் நண்பகல் 12.15 மணிக்கு தென்காசி சென்றடையும்.

செங்கோட்டை – தாம்பரம் சிறப்பு ரயில் (06124) அக்டோபர் 4-ம் தேதி மாலை 5.40 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

சென்னை சென்ட்ரல் – போத்தனூர்

சென்னை சென்ட்ரல் – போத்தனூர் சிறப்பு ரயில் (06023) அக்டோபர் 1-ம் தேதி இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9.15 மணிக்கு போத்தனூர் சென்றடையும்.

போத்தனூர் – சென்னை பீச் சிறப்பு ரயில் (06024) அக்டோபர் 4-ம் தேதி மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4 மணிக்கு சென்னை பீச் வந்தடையும்.

எர்ணாகுளம் – சென்னை எழும்பூர்

எர்ணாகுளம் – சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் (06056) அக்டோபர் 4-ம் தேதி இரவு 11.10 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் நண்பகல் 12.30 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

சென்னை எழும்பூர் – எர்ணாகுளம் சிறப்பு ரயில் (06055) அக்டோபர் 5-ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.

தாம்பரம் – மானாமதுரை மெமு சிறப்பு ரயில்

தாம்பரம் – மானாமதுரை மெமு சிறப்பு ரயில் (06159) அக்டோபர் 1-ம் தேதி மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 1.20 மணிக்கு மானாமதுரை சென்றடையும்.

மானாமதுரை – தாம்பரம் மெமு சிறப்பு ரயில் (06160) அக்டோபர் 4-ம் தேதி பிற்பகல் 2.45 மணிக்கு புறப்பட்டு, அன்றிரவு 11.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

மேலும், திருநெல்வேலி – தாம்பரம் சிறப்பு ரயில் (06166) சேவை அக்டோபர் 4-ம் தேதியும், தாம்பரம் – திருநெல்வேலி சிறப்பு ரயில் (06165) சேவை அக்டோபர் 5-ம் தேதியும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இவை ஏற்கனவே உள்ள நேர அட்டவணை மற்றும் நிறுத்தங்களின்படி இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பதிவு வசதி கொண்ட சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு அக்டோபர் 1-ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கும் என தெற்கு ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு – திருவனந்தபுரம்

ரயில் எண் 06585 எஸ்.எம்.வி.டி பெங்களூரு – திருவனந்தபுரம் நார்த் சிறப்பு ரயில், அக்டோபர் 1-ம் தேதி மாலை 4.50 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 10 மணிக்கு திருவனந்தபுரம் நார்த் சென்றடையும்.

இதன் மறுமார்க்க ரயில் 06586, அக்டோபர் 3-ம் தேதி மதியம் 12.40 மணிக்கு திருவனந்தபுரம் நார்த்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 6 மணிக்கு பெங்களூரு கண்டோன்மென்ட் சென்றடையும்.

பெங்களூரு – கண்ணூர்

ரயில் எண் 06595 எஸ்.எம்.வி.டி பெங்களூரு – கண்ணூர் சிறப்பு ரயில், அக்டோபர் 1-ம் தேதி இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 12.50 மணிக்கு கண்ணூர் சென்றடையும்.

ரயில் எண் 06596 கண்ணூர் – பெங்களூரு கண்டோன்மென்ட் சிறப்பு ரயில், அக்டோபர் 2-ம் தேதி மாலை 4.10 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 6 மணிக்கு பெங்களூரு கண்டோன்மென்ட் சென்றடையும்.

பெங்களூரு – சென்னை

ரயில் எண் 06587 பெங்களூரு கண்டோன்மென்ட் – டாக்டர் எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில், அக்டோபர் 1 மற்றும் 4-ம் தேதிகளில் காலை 7.30 மணிக்கு புறப்பட்டு, அன்றைய தினம் மதியம் 3 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

மறுமார்க்கத்தில் ரயில் எண் 06588 சென்னை சென்ட்ரல் – பெங்களூரு கண்டோன்மென்ட் சிறப்பு ரயில், அக்டோபர் 1 மற்றும் 4-ம் தேதிகளில் மாலை 4.10 மணிக்கு புறப்பட்டு, இரவு 11.30 மணிக்கு பெங்களூரு கண்டோன்மென்ட் சென்றடையும்.

முன்பதிவு

06587/06588 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

06595/06596 மற்றும் 06585/06586 ரயில்களுக்கான முன்பதிவு செப்டம்பர் 1-ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கும் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. செப்.30 தேதியிட்ட செய்திக்குறிப்பில் இந்த தேதி குறிப்பிடப்பட்டுள்ளதால், பயணிகள் முன்பதிவு நிலையை ரயில்வே முன்பதிவு தளத்தில் உறுதி செய்து கொள்வது நல்லது.