இதையொட்டி, கஜசிர விநாயகருக்கு வரலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு வரலட்சுமி பூஜை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
பெண்கள் வரலட்சுமி அம்மன் சிலையின் முன்பு புதிய சேலை, மஞ்சள் கயிறு மற்றும் வளையல்கள் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர். தொடர்ந்து, பெண்கள் பக்தியுடன் பூஜையில் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
பூஜையைத் தொடர்ந்து கோயில் வளாகத்தில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து, அன்னதானத்தில் பங்கேற்றனர்.